கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

0 2843
கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தனியார் பள்ளிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

+1 மாணவர் சேர்க்கைக்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LKG முதல் +2 வரையிலான மாணவர் சேர்க்கை விவரத்தை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments