இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க தேசிய உதவி எண் அறிவிப்பு.!

0 2905

இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க ‘155260’ என்ற தேசிய உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதை உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயக்கி வருகிறது. ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் இந்த உதவி எண் செயல்படுகிறது.

தற்போது, 7 மாநிலங்கள் இதை அமல்படுத்தி வருகின்றன என்றும் மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments