பெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..!

0 8932
பெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு; திருப்பூர் இளைஞர் உள்பட 2 பேர் கைது- சிம்கார்டு, லேப்டாப், கணினி பறிமுதல்

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராணுவ ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக, பாகிஸ்தான் உளவாளிகள் சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலிகுரியில் பணியாற்றும் ராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு சமீபத்தில் வந்த தொலைபேசி அழைப்பில் பேசியவர் ராணுவத்தின் செயல்பாடுகள், ராணுவம் நிறுத்தப்பட்டுள்ள எல்லை பகுதிகள் உள்ளிட்ட தகவல்கள் பற்றி கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த அதிகாரி ராணுவ உளவுத்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் உளவுப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்த அழைப்பு பெங்களூருவில் இருந்து வந்திருப்பதும் இதற்காக போலி சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. மேலும் பெங்களூரில் 6 இடங்களில் சட்ட விரோதமாக 'தொலைபேசி இணைப்பகத்தை' திறந்து இதுபோன்ற மோசடி நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த கவுதம் விஸ்வநாதன் மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த இப்ராகிம் முல்லட்டி ஆகிய 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிம் கார்டு, லேப்டாப், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments