மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் நீக்கம்; புதிதாக மம்தாவின் படம் இணைப்பு

0 2815
மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் நீக்கம்; புதிதாக மம்தாவின் படம் இணைப்பு

மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழில் இடம் பெற்றிருந்த மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் 3ம் கட்டமாக 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதும் வழங்கப்படும் சான்றிதழில் இதுவரை பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றிருந்தது.

இதனால் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் போது, சான்றிதழையும் ஒரு சாதனமாக தேர்தல் பரப்புரையில் பாஜகவினர் மேற்கொண்டனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது வழங்கப்பட்டு வரும் சான்றிதழில் மோடியின் படம் நீக்கப்பட்டு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments