இந்தியாவில் தங்களது தடுப்பூசிக்கு அதிவிரைவு ஒப்புதல் வழங்குமாறு ஃபைசர் நிறுவனம் வலியுறுத்தல்

0 24899
இந்தியாவில் தற்போது பரவும் B.1.617.2 கொரோனா வைரசுக்கு எதிராக திறம்பட செயலாற்றும் என்பதால் தங்களது தடுப்பூசிக்கு அதிவிரைவு ஒப்புதல் வழங்குமாறு, ஃபைசர் நிறுவனம் இந்திய அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் தற்போது பரவும்  B.1.617.2 கொரோனா வைரசுக்கு எதிராக திறம்பட செயலாற்றும் என்பதால் தங்களது தடுப்பூசிக்கு அதிவிரைவு ஒப்புதல் வழங்குமாறு, ஃபைசர் நிறுவனம் இந்திய அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி பொருத்தமானது என்பதுடன் 2 முதல் 8 டிகிரி வெப்ப நிலையில் ஒரு மாத காலம் வரை அதை இருப்பு வைக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபருக்குள் 5 கோடி தடுப்பூசி டோசுகளை இந்தியாவுக்கு வழங்க தயாராக உள்ளதாகவும் ஃபைசர் தெரிவித்துள்ளது.

ஆனால், தடுப்பூசி தொடர்பான இழப்பீடுகள் உள்ளிட்டவற்றில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அது விதித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை வல்லுநர் குழு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments