இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகுவுடன் அதிபர் ஜோ பைடன் பேச்சு; விரைவில் சண்டை நிறுத்தம், படைக்குறைப்பு செய்ய வலியுறுத்தல்

0 1533
இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகுவுடன் அதிபர் ஜோ பைடன் பேச்சு; விரைவில் சண்டை நிறுத்தம், படைக்குறைப்பு செய்ய வலியுறுத்தல்

ஸ்ரேல் பிரதமர் நெதான்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் மிகவும் குறிப்பிடத்தக்க படைக்குறைப்பை தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் -ஹமாஸ் இடையே அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகளின் நெருக்குதல் இஸ்ரேலுக்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரின் ஜூன் பியரி, சண்டை நிறுத்தம் ஏற்படுத்தி அமைதியை ஏற்படுத்த ஜோ பைடன் முயன்று வருவதாக தெரிவித்தார்.

இதனிடையே ராணுவத் தலைமையகத்திற்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகு தமது இலக்கை எட்டும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments