தமிழகத்தில் தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு, மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

0 2423
தமிழகத்தில் தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு, மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

மிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக சென்னை - தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் துவக்க உரை நிகழ்த்திய முதலமைச்சர், கொரோனா தடுப்புப் பணியில், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து பணியாற்ற வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

பொய்யுரை - புகழுரை கேட்க தாம் இங்கு வரவில்லை என குறிப்பிட்ட முதலமைச்சர், உள்ளதை உள்ளபடி எதிர்கொண்டு பொதுமக்களை சந்தித்து, அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments