சிறுமிகளின் ஆபாசப் படங்களை பதிவேற்றும் உலகின் மிகப் பெரிய நெட்ஒர்கை முடக்கினர் ஜெர்மன் போலீசார்..!

0 8119
சிறுமிகளின் ஆபாசப் படங்களை பதிவேற்றும் உலகின் மிகப் பெரிய நெட்ஒர்கை முடக்கினர் ஜெர்மன் போலீசார்

சிறுமிகளின் ஆபாசப்படங்களைப் பார்ப்பது, பகிர்வதுமாக இருந்த உலகின் மிகப் பெரிய நெட்ஒர்க்கை ஜெர்மன் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

இரு ஆண்டுகளாக இயங்கி வந்த இணையதளம் ஒன்றில் சுமார் 4 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்து வந்தனர். ஆபாச இணையதளம் குறித்து ஜெர்மன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மிகவும் ரகசியமாகச் செயல்பட்ட அவர்கள் குறிப்பிட்ட இணையதளத்தை இயக்கியதாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

முதல் குற்றவாளி ஜெர்மனியின் பாடர்பார்ன் என்ற இடத்திலும், இரண்டாமவனை பராகுவே நாட்டிலும் 3வது குற்றவாளியை ஹம்பர்க் நகரிலும் வைத்து கைது செய்துள்ளனர்.

தற்போது பாய்ஸ்டவுன் இணையத்தையும் ஜெர்மன் போலீசார் முடக்கி அதில் பதிவேற்றம் செய்ய இருந்த 3 ஆயிரத்து 500 ஆபாச வீடியோக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments