கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஆஸ்திரேலியா - இந்தியா விமான சேவை ரத்து : ஆஸ்திரேலிய அரசு முடிவு

0 1660
ஆஸ்திரேலியா - இந்தியா விமான சேவை ரத்து

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மே 15ந் தேதி வரை இந்தியாவில் இருந்து இயக்கப்படும் நேரடி பயணிகள் விமான சேவையை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு கருதி இந்தியாவில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசை அந்நாட்டின் குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாநிலங்கள் வலியுறுத்தி இருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரிட்டன், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்தியாவில் இருந்து விமானங்கள் வருவதற்கு தடை விதித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments