இந்தியர்களுக்கு NO ENTRY... கைலாசா அதிபர் அதிரடி அறிவிப்பு !

0 75098

கைலாசானு ஒன்னு இருக்கா இல்லையா... நம்பலாமா நம்ப கூடாதா என்ற கேள்விகளுக்கு நடுவே, அவ்வப்போது கைலாசா குறித்த புது புது அப்டேட்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துபவர் நித்தியானந்தா. தற்போது இந்தியாவில் இருந்து கைலாசாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்கிற புதிய அப்டேட்டை அறிவித்துள்ளார் .

நித்தியானந்தா மீது பாலியல் புகார், ஆள் கடத்தல் என்று ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசாருக்கு தண்ணீ காட்டி வரும் நித்தி, கைலாசாவிற்கு என்று தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார்.

மேலும், கைலாசாவில் வியாபாரம் செய்ய விரும்புவர்கள் வரவேற்கபடுகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதைப் பார்த்து கைலாசாவில் ஹோட்டல், டீ கடை எனத் தொழில் செய்து பிழைக்க பலர் நித்தியானந்தாவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்பத்தி வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் திருப்பதி எழுமலையான் வேடத்தில், புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அதன் சூடு தனிவதற்குள் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்தி.

நித்தி பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில், கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நித்தியாநந்தாவின் இந்த அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் ’ஆளே இல்ல பெல்லு’ என்று வடிவேலு பட டையலாக்கை வைத்து அவரை கலாய்த்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments