2025 ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க ரஷ்யா முடிவு

0 1236
2025 ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க ரஷ்யா முடிவு

ரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி நிலையம்  கடந்த 1998 ல் ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராயச்சி நிறுவனங்களால் கூட்டாக அமைக்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக இந்த 2 நாடுகளுடன் கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆய்வாளர்கள் இதில் தங்கி பல ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதன் செயல்திறனை இழந்து அதன்பின்னர் 2030 க்கும் 2050 க்கும் இடையே பூமியில் எங்காவது ஒரு இடத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நிலவும் அரசியல், வர்த்தக பனிப்போர் காரணமாக, புதிய சர்வதேச விண்வெளிநிலைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என ரஷ்யா முடிவு செய்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments