வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்

0 1382

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மேலும், வருகிற 22-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வடமாவட்டங்கள் உள்பட 22 மாவட்டங்களில் அதிகபட்ச பகல் நேர வெப்பநிலை இயல்பை விட4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். தமிழகம், புதுச்சேரியில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 80 சதவீதம் வரை இருக்கும் என்பதால் வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும்.

தேவைக்கேற்ப நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், வெள்ளை மற்றும் வெளிறிய வண்ண கதர் ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments