விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: நிவாரண தொகைக்கான காசோலையில் பணம் இல்லாததால் குடும்பத்தினர் அதிர்ச்சி

0 2579

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலை, பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ஆலை நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில், ஆலை நிர்வாகம் வழங்கிய காசோலை பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகியுள்ளது. மொத்தமாக 25 பேருக்கு காசோலை வழங்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு மட்டுமே பணம் இருந்துள்ளது, மற்ற 24பேரின் காசோலைக்கு பணம் இல்லை. நிவாரணம் வழங்குவதாக கூறி ஆலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments