நடுக்கடலில் தமிழக மீனவர்கள் சென்ற விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்து: 3 மீனவர்கள் பலி - 9பேர் மாயம்

0 2880
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் சென்ற விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்து

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் சென்ற விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் பலியான மீனவர்கள் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் பேப்பூரிலிருந்து கடந்த ஞாயிறன்று தமிழகம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மங்களூர் அருகே, விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 2 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  மீனவர்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டு, குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments