யோகி பாபு என்ன ஒரு நடிகர்... மண்டேலா படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ள ஐபிஎல் வீரர்.!

0 3409

மண்டேலா படத்தில் நடித்த யோகி பாபுவை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட ஐபிஎல் வீரர் ஒருவர் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த திரைப்படம் மண்டேலா. பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவான மண்டேலா திரைப்படத்தில் யோகி பாபுடன் ஷீலா, சங்கிலி முருகன் என பலரும் நடித்துள்ளனர். மண்டேலா திரைப்படம் திரையரங்குக்கிற்கு வராமல் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இரண்டு கிராம மக்களும் சேர்ந்து தேர்வு செய்யும் ஊர் தலைவர் தேர்தலில், மண்டேலா என்ற ஒருவரின் ஓட்டு வெற்றியாளரைத் தீர்மானிப்பதை கதையம்சமாக கொண்ட மண்டேலா திரைப்படம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற இந்த தருணத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. திரைக்கு வரமால் ஓடிடியில் வெளியானாலும் மண்டேலாவில் நடித்த யோகி பாபுவையும், படக்குழுவினரையும் திரைப்பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றன.

இந்த நிலையில் மண்டேலா திரைப்படத்தில் நடித்த யோகி பாபுவை ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஹைதரபாத் அணியை சேர்ந்த வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி வீடியோ காலில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். யோகி பாபுவின் நடிப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்ட ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, சில நாட்களுக்கு முன்பாக மண்டேலா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸில் பாத்ததாகவும், அதில் யோகி பாபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து வியந்ததாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி யோகி பாபுவை என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை என்று புகழ்ந்து தள்ளிய ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது நண்பரான யோகிபாபுவுடன் வீடியோ காலில் பேச வைத்ததாகவும் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments