திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை - தமிழக அரசு

0 12732
கொரோனா பரவலை தடுக்க, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை

கொரோனா பரவலை தடுக்க, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை

கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வணிக காய்கறிகள் மட்டும் செயல்பட தடை

மாவட்டங்களில் உள்ள மொத்த காய்கனி வியாபார வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை

அரசு, தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி

பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை

அனைத்து கடைகளிலும் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி

உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டும் பயன்படுத்த அனுமதி

உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி

கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி

அனைத்து திரையரங்குகளிலும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி

உள்ளரங்குகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில், நிகழ்வுகள், விழாக்களை நடத்த அனுமதி

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபட அனுமதி

திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி

இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி

வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர 3 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோருக்கு இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்

வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி

சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதி

படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், தடுப்பூசி போட்டுக் கொள்வதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்

விளையாட்டு அரங்கங்கள், மைதானங்களில் பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடத்த அனுமதி

நீச்சல் குளங்களில், விளையாட்டுப் பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி

அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை தொடரும்

நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்ய வேண்டும்

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தல்

வரும் 10ஆம் தேதி அமலுக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள், ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் கிடையாது

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்

உணவகங்கள், தேநீர் கடைகள், 50 விழுக்காடு இருக்கைகளுடன் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments