மீண்டும் ஊரடங்கா..? மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலேசனை

0 9542
கொரோனா பரவி வரும் நிலையில் 12 மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கொரோனா பரவி வரும் நிலையில் 12 மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பொது இடங்களில் கொரோனாவைப் பரவாமல் தடுக்க கடுமையான நடைமுறைகளை அமல்படுத்தும்படி அப்போது மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் நோய்த்தொற்று பரவல் அதிகமுள்ள 12 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு பல்வேறு முக்கிய ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

மீண்டும் முழு ஊரடங்கு வரலாம் என்ற அச்சத்தால் புனே போன்ற நகரங்களில் ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் திரண்டுள்ளனர்.

டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டெல்லி, சண்டிகர், அகமதாபாத், மும்பை, புனே, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேர வாழ்க்கை முடங்கி விட்டது. கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் யாவும் இரவு 8 மணியளவில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால்
வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இரவில் நடமாடும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்குப் பதிவு செய்கின்றனர். பொது இடங்களில் முக்ககவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறும் திருமண விழாக்கள், பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஷிர்டி சாய்பாபா கோவில் மும்பை சித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரிலும் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜிலும் கங்கை நதிக்கரையில் நடைபெறும் கும்பமேளாவில் பல லட்சம் பேர் திரண்டிருக்கும் நிலையில் கொரோனா பரவி வருவது பெரும் ஆபத்தான சூழலாகக் கருதப்படுகிறது.

அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments