வீல் சேர் இல்லை...நடக்க முடியாத மனைவியை முதுகில் சுமந்து சென்று வாக்களிக்க வைத்த கணவர்!

0 4591
மனைவியை சும்நத ராமசாமி

சென்னையில் நடக்க முடியாத மனைவியை முதுகில் சுமந்து சென்று கணவர் வாக்கு அளிக்க வைத்தார். 

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி கல்யாணபுரம் சென்னை நடுநிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் 19 வாக்குச்சாவடிகள் உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையத்துக்கு இரண்டு கால்களையும் இழந்த சுமதி என்ற பெண் தனது கணவர் ராமசாமியோடு மீன்பாடி வண்டியில் வந்தார்.வாக்குச்சாவடி மையத்தில் சுமதியை அழைத்து செல்ல வீல் சேர் கேட்டகப் பட்ட போது, அந்த மையத்தில் வீல் சேர் இல்லை என தெரிய வந்தது.

19 வாக்குச்சாவடிகள் உள்ள மையத்தில் ஒரு வீல் சேர் கூட இல்லாதது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை.இதையடுத்து சுமதியை அவரின் கணவர் ராமசாமி தனது முதுகில் சுமந்து சென்று வாக்களிக்க செய்தார். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கவலைக்கொள்ள செய்தது . அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை வசதி, மாற்று திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வு தளம், அவீல் சேர் வசதிகள் செய்யப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், எந்த வசதியும் இல்லாமல்தான் வாக்குச்சாவடிகள் செயல்படுகின்றனவா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments