ஆப்கானிஸ்தானில் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 80 தாலிபான்கள் பலி..!

0 1545
ஆப்கானிஸ்தானில் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 80 தாலிபான்கள் பலி..!

ப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தெற்கு காந்தகார் மாகாணத்தில் உள்ள அர்கந்தாப் என்ற இடத்தில் தாலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் விமானப் படை விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் இரு டேங்குகளும், ஏராளமான வாகனங்களும் சேதமடைந்தன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments