வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான் - முதலமைச்சர்

0 702
தமிழக வரலாற்றில் முதல் முறையாக வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அவர் 13 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், 2000 மினி கிளினிக்கை திறந்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது என்றார். வீடற்ற இடமற்ற ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

ஏழை மக்களும் உயர்தர சிகிச்சை பெற வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவாக இருந்த து என்ற அவர்,
தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்து, அந்த கனவு நனவாகி உள்ளதாக அவர் கூறினார்.

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே அதிமுகவில் குறிக்கோள் என்ற அவர், திமுக போல அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பது அதிமுகவின் எண்ணம் இல்லை என்றார். 12 110 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம், 14 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 33 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்தாய் வாழி காவிரி திட்டம் நிறைவேற்றப்படும் பிரதமர் மோடி அறிவித்துள்ளதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கோப்புகள் எதுவும் தேங்கியதில்லை என்றும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments