அதிமுக ஏழை எளிய மக்களுக்கான கட்சி: முதலமைச்சர் பேச்சு

ஊத்தங்கரையில் நீர்நிலைகளை உயர்த்த எடுத்த நடவடிக்கை அதிமுக விவசாயகட்சி என்பதற்கு சாட்சியாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டா பகுதியில் அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வத்தை அறிமுகம் செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, அதிமுக ஏழை, எளிய மக்களுக்கான கட்சி என்று குறிப்பிட்ட முதலமைச்சர் நாட்டுக்காக உழைக்கும் கட்சி அதிமுக எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசும்போது, அதிமுக காணமல் போகும் என மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருவமாகக் கூறிய முதலமைச்சர், ஊத்தங்கரை வந்துபார்க்கும்படியும், அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் குறிப்பிட்டார். மேலும் திமுக கட்சியையும், கட்சியினரையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஊத்தங்கரை தொகுதியில் 33 ஏரிகளை இனைக்கும் வகையில் நிலங்களை கையகபடுத்தும் பணி நடந்து வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அப்பகுதியில் நீர்நிலைகளை உயர்த்த எடுத்த நடவடிக்கை அதிமுக விவசாயகட்சி என்பதற்கு சாட்சியாக இருப்பதாக கூறினார்.
Comments