சென்னையின் வளர்ச்சிக்குத் திட்டம்: பரப்புரையில் அன்புமணி விளக்கம்

மாபெரும் போராட்டங்கள் நடத்தியவரும், மிகச் சிறந்த பேச்சாளருமான வைகோவின் நிலை இந்த தேர்தலில் பரிதாபமாக உள்ளதாகப் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் கசாலியை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஈழப்போராட்டம், தமிழுக்கான போராட்டங்களை நடத்திய மிகப்பெரிய தலைவரான வைகோவின் நிலை பரிதாபமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னை மாநகரின் வளர்ச்சிக்குத் தான் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சென்னையில் அரசுப் பேருந்துகளை நவீனமாக்கி, எண்ணிக்கையை எட்டாயிரமாக அதிகப்படுத்தி இலவசமாகவே பொதுமக்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய முடியும் எனத் தெரிவித்தார். அதன்மூலம் விபத்துக்கள், காற்று மாசுபாடு குறையும் என்றும், மக்களின் பணம் சேமிக்கப்படும் என்றும் விளக்கினார்.
Comments