தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

0 1932
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

நீட் தேர்வால் பல மாணவ-மாணவிகள் உயிரை இழந்திருப்பதாக வேதனை தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் சட்ட ரீதியாக நீட் தேர்வை தமிழகத்தில் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

தாம்பரத்தில் பேசிய ஸ்டாலின், கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு பிறகு மக்கள் பணியாற்றிட தலைவர் பொறுப்பிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோது தமிழகத்தில் நீட் வரவில்லை என்று கூறிய ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்காத கட்சி அதிமுக தான் என்றார்.

அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்திருப்பதாகக் கூறிய ஸ்டாலின், தற்போதைய விலையுடன் ஒப்பிட்டு பட்டியலிட்டார்.

மீனம்பாக்கத்திலிருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கலை-அறிவியல் கல்லூரிகள், மருத்துவமனைகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments