சென்னையில் 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ரூ. 33,840 ரூபாய்க்கு விற்பனை

0 9585
சென்னையில் 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ரூ. 33,840 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் 22 காரட் அணிகலன் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, 33 ஆயிரத்து 840 ரூபாயாக உள்ளது.

சென்னையில் 22 காரட் அணிகலன் தங்கம் நேற்று ஒரு கிராம் நாலாயிரத்து 180 ரூபாயாகவும் ஒரு பவுன் 33 ஆயிரத்து 440 ரூபாயாகவும் இருந்தது.

இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 33 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றுக் கட்டி வெள்ளி ஒரு கிலோ 70 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்று ஒரு கிலோ வெள்ளி 71 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments