பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எம்.பிக்கள் அமளி... இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின் இரண்டாவது நாளின் தொடக்கத்தில் இருந்தே,மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 2 மணிக்கு கூடிய போதும் அமளி ஓயாத தால், அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதே போன்று மக்களவையிலும் இதே பிரச்சனையை முன்னிறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையும் நாள் முழுவதும் முடங்கியது.
Comments