5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட உள்ளதால் நாடாளுமன்ற 2வது அமர்வு முன்கூட்டியே முடிய வாய்ப்பு!

நாடாளுமன்ற 2வது அமர்வு முன்கூட்டியே முடிய வாய்ப்பு
5 மாநில தேர்தல் எதிரொலியாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியை திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பல்வேறு கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. நேற்று தொடங்கிய இந்த கூட்டத் தொடர் அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரை நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது.
5 மாநில தேர்தலில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மார்ச் 27-ஆம் தேதிக்கு முன்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முடித்துக் கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
Comments