அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

0 6637
சட்டப்பேரவை தேர்தலை அமமுகவுடன் கூட்டணி அமைத்து ஓவைசி கட்சி போட்டியிடுகிறது

அமுமுக கூட்டணியில் அசதுத்தீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்- ஏ - இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சிக்கு, 3 தொகுதி கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே சென்னையில் தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

இதன்படி,வாணியம்பாடி, கிருஷ்ண கிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் அகில இந்திய மஜ்லிஸ்- ஏ - இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சி போட்டியிடும். இதற்கான உடன்பாட்டில், அ.ம.மு.க பொதுச்செயலாளர் T.T.V தினகரனும், அகில இந்திய மஜ்லிஸ்- ஏ - இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சியின் தமிழக நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments