தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு
தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்தை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி , அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட உள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு விட்டதால் ஓரிரு நாட்களில் கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 அல்லது 11 இடங்கள் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments