ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் யானைகளின் மீது சவாரி செய்தபடி நூதன போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓங்யா (ONGYAW) கிராமத்தை சேர்ந்த மக்கள் யானைகள் மீது சவாரி செய்தபடி, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரில் கடந்த ஒன்றாம் தேதி தேதி ஆட்சியை கைப்பற்றிய அந்நாட்டு ராணுவத்தை கண்டித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வீதிக்கு வந்து போராடும் மக்களை காவல்துறை ஒடுக்கிவரும் சூழலில், ஓங்யா கிராமத்தை சேர்ந்த மக்கள், யானைகளின் மீது சவாரி செய்தபடி, அணிவகுத்தனர். தொடர்ந்து ஏராளமான மக்கள் யானைகளுக்கு பின்னால் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் பேரணியாக சென்றனர்.
Comments