புயல் நிவாரண நிதி மோசடி: தமிழக அரசு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புயல் நிவாரண நிதி 110 கோடி ரூபாயை தகுதியில்லாதவர்கள் மோசடியாக பெற்ற விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுவில், நிவர், புரெவி உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியை, தகுதியில்லாத சிலர் தங்கள் நிலங்களுக்கான ஆவணங்களை வைத்து 110 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக கூறியிருந்தார். இது குறித்து புகார் அளித்த பின்னர் 32 கோடி ரூபாய் திருப்பி வசூலிக்கப்பட்டதாகவும், 80 அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், நிவாரண உதவி பெற்ற தகுதியில்லாதவர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Comments