நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

0 5426
நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் டிரைடன் ஆர்ட்ஸ் ரவி வழக்கு தொடர்ந்தார். நடிகர் விஷால் தயாரிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தின் கதையை, அப்படத்தின் இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விஷால் தயாரிப்பில் படத்தை உருவாக்கியுள்ளது, காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

வழக்கு குறித்து நடிகர் விஷால், படத்தின் இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments