மும்பை தனியார் கிட்டங்கியில் பற்றிய தீ சுமார் 20 மணி நேரத்திற்கு பின்னர் அணைப்பு

மும்பையில், பழைய பொருட்கள் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து, சுமார் 20 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின்னர் அணைக்கப்பட்டுள்ளது.
மும்பையில், பழைய பொருட்கள் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து, சுமார் 20 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின்னர் அணைக்கப்பட்டுள்ளது.
மும்பையின் புறநகர் பகுதியான மன்கூர்டு (Mankhurd) என்ற இடத்தில் உள்ள அந்த பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குத் தீ விபத்து ஏற்பட்டது.
19 தீயணைப்புத்துறை வாகனங்கள், 11 தண்ணீர் லாரிகள் மூலம், தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும், கட்டுக்கடங்காமல் கொளுந்து விட்டு எரிந்த தீ, சுமார் 20 மணி நேரத்திற்கு பிறகு, சனிக்கிழமை பிற்பகலில் தான், முழுவதும் அணைக்கப்பட்டது.
Comments