பாதையில் கல் வைத்து, கீழே விழுந்ததும் பைக் திருட்டு !- வடமாநில இளைஞருக்கு காப்பு

0 6280

வேடசந்தூர் அருகே சாலையில் கல்லை வைத்து நிலை தடுமாறி கீழே விழ வைத்து இருசக்கர வாகனத்தை திருடிய வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள வடமதுரை மேற்கு ரத வீதியை சேர்ந்த குமரேசன் என்பவர் திருமண மண்டபம் வைத்துள்ளார். இவரது மண்டபத்தில் அய்யலூரை சேர்ந்த சரஸ்வதி என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு சரஸ்வதியை வீட்டில் விடுவதற்காக குமரேசன் தன் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். அய்யலூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்றபோது , பாலத்தின்  நடுவில் இருந்த பெரிய கல்லின் மீது பைக் ஏறி இறங்கியது. இதில், நிலை தடுமாறிய சரஸ்வதி கீழே விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த குமரேசன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு சரஸ்வதிக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார்.

அப்போது , திடீரென்று மறைவிடத்திலிருந்து வந்த மர்ம நபர் ஒருவர் குமரேசனின் பைக்கை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதை கண்டு குமரேசன் பதறிப் போனார்.காயமடைந்து கிடக்கும் சரஸ்வதியை பார்ப்பதா... அல்லது பைக்கை ஓட்டிச் செல்லும் மர்ம நபரை பிடிப்பதா என்று தவித்தார். பின்னர், குமரேசன் சரஸ்வதியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தொடர்ந்து, தன் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது குறித்து வடமதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், அய்யலூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கம்பளி வியாபாரம் செய்து வந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம், ஜலாவார் மாவட்டம், பச்பகார் என்ற இடத்தை சேர்ந்த கெலாஷ்( வயது 23) என்பதும், குமரேசனின் பைக்கை திருடியதோடு, அந்த பைக்கிலேயே கொஞ்சமும் பயம் இல்லாதமல் அதே பகுதியில் கம்பளி வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து , கெலாஷை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments