கோயம்பேட்டில் பயங்கரம்: 4 பேருக்கு வளைத்து வளைத்து வெட்டு, கஞ்சா போதையில் ரவுடி அட்டூழியம்

0 9628
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கஞ்சா போதையில் ரவுடி ஒருவன் மாமூல் கேட்டு வியாபாரிகள், தொழிலாளர்கள் என 4 பேரை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கஞ்சா போதையில் ரவுடி ஒருவன் மாமூல் கேட்டு வியாபாரிகள், தொழிலாளர்கள் என 4 பேரை அரிவாளால்  வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை கோயம்பேடு பெரியார் காய்கறி மார்க்கெட்டில் உள்ள சி-பிளாக் பகுதியில், நேற்று இரவு மர்ம நபர் ஒருவன் கஞ்சா போதையில் கையில் அரிவாளுடன் நுழைந்துள்ளான்.

அங்கிருக்கும் டீக்கடை ஒன்றில் சிகரெட் கேட்டும் மாமூல் கேட்டதோடு, அரிவாளைக் காட்டி மிரட்டியதும் கடைக்குள் இருந்தவர்கள் அச்சத்தில் விலகிச் சென்றனர்.

கலவரத்தின் நிலவரம் புரியாமல் அருகே வந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளி ஒருவரை கையில் வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு, அங்கிருந்தவர்கள் ஓடிவிடுமாறு அந்த ரவுடி எச்சரித்துள்ளான்.

தலையில் வெட்டுப்பட்ட நபர் நிலைகுலைந்து விழுந்தார். அங்கிருந்த மற்றொரு நபர் அரிவாளை பிடுங்க முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.

இதன் பிறகு கஞ்சா போதை நபர், வெங்காய மூட்டைகளை தூக்கி அடுக்கி கொண்டிருந்த மற்றொரு தொழிலாளியையும் வம்பிழுத்து வெட்டியுள்ளான்.

பின்னர், அருகில் இருந்த வெங்காய மண்டியில் புகுந்து கடையில் மாமுல் கேட்டு வியாபாரிகளை தாக்கியுள்ளான்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஒட்டு மொத்த வியாபாரிகளும், அந்த ரவுடியை சுற்றிவளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரவுடி உடன் வந்த அவனது கூட்டாளி தப்பியோடி விட்டான்.

போலீசார் விசாரணையில், கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த நபர், வியாசர்பாடியை சேர்ந்த ராஜேஷ் என்பதும், அவன் மீது பெரியமேடு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

ரவுடியின் தாக்குதலில் காயமடைந்த வியாபாரிகள், தொழிலாளிகள் என நான்கு பேரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments