தமிழகத்தில் 160 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் அமைக்கத் திட்டம்

0 2690
தமிழகத்தில் 160 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் அமைக்கத் திட்டம்

தமிழகத்தில் 160 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி சனியன்று தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் மூவாயிரம் மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 160 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னையில் 12 மையங்கள், சேலத்தில் 7 மையங்கள், மதுரை, திருச்சியில் தலா 5 மையங்கள், கோவையில் 4 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments