ட்விட்டரில் டிரம்புக்கு தடை சரியான முடிவு, ஆனால் ஆபத்தான முன்னுதாரணம்- ட்விட்டர் சிஇஓ ஜேக் டோர்சி

ட்விட்டரில் டிரம்புக்கு தடை விதித்தது சரியான முடிவு, ஆனால் ஆபத்தான முன்னுதாரணம் என ட்விட்டர் சிஇஓ ஜேக் டோர்சி கூறியுள்ளார்.
அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது பேச்சுரிமையை பறிக்கும் செயல் என சிலர் குறைகூறினர். பேச்சு சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, தனியார் நிறுவனங்கள் முடிவு செய்யக்கூடாது என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியிருந்தார்.
இந்நிலையில், டிரம்புக்கு தடை விதித்ததை பெருமையாக நினைக்கவில்லை என்றும், ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுப்பதில் ஏற்பட்ட தோல்வியையே இது காட்டுவதாகவும் ட்விட்டர் சிஇஓ ஜேக் டோர்சி கூறியுள்ளார்.
அதேசமயம், உலகளாவிய உரையாடலின் மீது ஒரு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனம் அதிகாரம் செலுத்துவது என்பது ஆபத்தான முன்னுதாரணமாகி விடக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments