உணவக உரிமையாளருக்கு மிரட்டல்.. பாஜக பிரமுகர்கள் இருவர் கைது..!

0 4376

சென்னையில் சாப்பிட்ட சிக்கன் ரைஸ்க்கு காசு கொடுக்க மறுத்து, அமீத்ஷாவின் பி.ஏ.வுக்கு போன் போடுவேன் என்று மிரட்டிய பாஜக பிரமுகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிகேணி முத்தையா தெருவில் அபுபக்கர் என்பவர் நடத்தி வரும் துரித உணவகத்துக்கு கடந்த திங்கட்கிழமை இரவு பாஜக பிரமுகர்களான பாஸ்கரன், புருஷோத்தமன், சூர்யா ஆகியோர் வந்துள்ளனர். கடை மூடும் நேரத்தில் குடிபோதையில் வந்தவர்கள், சிக்கன் பிரைடு ரைஸ் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

உணவை தயார் செய்து கொடுத்து, சாப்பிட்டு முடித்ததும் பணம் தர மறுத்த பாஸ்கரன், தாம் பாஜக பகுதி செயலாளர் என்று கூறி தகராறு செய்துள்ளான். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் முன்னிலையிலேயே “அமித்ஷாவின் பி.ஏவுக்கு போன் போட்டால் ஆயிரம் பேரை கூட்டி வந்து மதக்கலரவம் ஏற்படுத்துவேன் எனவும் பாஸ்கரன் மிரட்டினான்.

போதையில் இருந்த மூவரையும் சமாதானம் செய்து அனுப்பிய போலீசார், வீடியோ காட்சிகள் சமூக வலைதலங்களிலும் ஊடகங்களிலும் வைரலான நிலையில், பாஸ்கரனையும் புருஷோத்தமனையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது ஆபாசமாக திட்டுதல், காயம் ஏற்படுத்துதல், மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகவுள்ள சூர்யாவை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதனிடையே சாப்பிட்ட சாப்பாட்டுக்கு பணம் கேட்டது ஒரு குற்றமா என பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர் அபுபக்கர் வேதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments