வாடிக்கையாளரிடம் லாவகமாக செல்போன் திருடிய இளைஞர்

காஞ்சிபுரம் செங்கழுநீர் ஓடை வீதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் லாவகமாக செல்போன் திருடும் சிசிடிவி காட்கள் வெளியாகியுள்ளன.
காஞ்சிபுரம் செங்கழுநீர் ஓடை வீதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் லாவகமாக செல்போன் திருடும் சிசிடிவி காட்கள் வெளியாகியுள்ளன.
வாடிக்கையாளர் போல் வந்த அந்த இளைஞர், பில் கவுண்ட்டரில் நின்றிருந்த நபரின் மேல் பாக்கெட்டில் இருந்த செல்போனை யாருக்கும் தெரியாமல் லாவகமாக எடுக்கிறார். பின்னர் அங்கிருந்து அந்த இளைஞர் சென்று விடுகிறார்.
முன்னதாக அதே இளைஞர் நெல்லுக்கார தெருவில் அமைந்துள்ள பேக்கரியில், வாடிக்கையாளர் ஒருவரிடம் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை திருடி தனது கைவரிசையை காட்டியுள்ளார். இது தொடர்பான புகாரில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments