சிமெண்ட் - உருக்கு தயாரிப்பு பெரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து விலையேற்றத்தில் ஈடுபடக் கூடாது - அமைச்சர் நிதின் கட்கரி

சிமெண்ட் - உருக்கு தயாரிப்பு பெரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து விலையேற்றத்தில் ஈடுபடக் கூடாது - அமைச்சர் நிதின் கட்கரி
சிமெண்ட் மற்றும் உருக்குத் தயாரிப்புத் துறையைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து விலையேற்றத்தில் ஈடுபடக்கூடாது என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கட்டுமான கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இத்தகைய செயலில் அந்த நிறுவனங்கள் ஈடுபடுவது முற்றிலும் தவறானது என்றார்.
சிமெண்ட் மற்றும் உருக்கு துறைக்கு கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விரைவில் ஆராயப்படும் என்றார்.
Comments