அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று கூடுகிறது

0 1343

மிழக சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க புதிய வியூகம் அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

300-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்க இருப்பதால் அவர்களுக்கு தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான நெகட்டிவ் சான்றிதழோடு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரம், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து விரிவாக விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொதுக்குழுக் கூட்டம் முடிந்த பின் இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச்செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுடன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments