44வது நாளாக போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு 8-வது சுற்று பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 44வது நாளாக போராடி வரும் விவசாயிகளுடன் 8வது சுற்று பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 44வது நாளாக போராடி வரும் விவசாயிகளுடன் 8வது சுற்று பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
டெல்லி விக்யான் பவனில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியுஷ் கோயல் பங்கேற்றுள்ளனர்.
40 விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக மத்திய அமைச்சர்கள் இருவரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Comments