ஆப்பிள் நிறுவனம் தனது மின்சாரக் கார் தயாரிப்பு திட்டத்துக்காக டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் பலரைப் பணியமர்த்தியுள்ளது

ஆப்பிள் நிறுவனம் தனது மின்சாரக் கார் தயாரிப்பு திட்டத்துக்காக டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் பலரைப் பணியமர்த்தியுள்ளது
ஆப்பிள் நிறுவனம் மின்சாரக் கார்கள் தயாரிக்கும் தனது திட்டத்துக்கு டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களைச் சேர்த்துள்ளது.
மின்சாரக் கார் தயாரிப்புத் தொழிற்சாலையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம் எஞ்சின் தயாரிப்பு, உட்புற, வெளிப்புற வடிவமைப்பு ஆகியவற்றுக்காகப் பொறியாளர்களைப் பணியமர்த்தியுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் பலரைப் பணியமர்த்தியுள்ளது. கொரோனா சூழலில் ஊழியர்களில் பெரும்பாலோர் வீட்டில் இருந்து இணைய வழியில் பணியாற்றுவதால் இந்தத் திட்டம் தாமதமாகி வருகிறது.
இதனால் ஆப்பிள் கார் சந்தைக்கு வருவதற்கு ஐந்தாண்டுகள் முதல் ஏழாண்டுகள் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
Comments