விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மீது நடிகர் விஜய் புகார்

தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகள் 2 பேரை அங்கிருந்து காலி செய்து தரும்படி, நடிகர் விஜய் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் ரவிராஜா, குமார் ஆகியோரை நடிகர் விஜய் தங்க வைத்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்த போது அவர்கள் இருவரும் ஆதரவாக செயல்பட்டதால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையடுத்து, வீட்டை காலி செய்யும் படி நடிகர் விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 பேரும் காலி செய்யவில்லை என்பதால், விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.
Comments