சென்னையில் மெட்ரோ மேம்பாலத்திலிருந்து சாலைகளில் கொட்டும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

0 8357

சென்னையில் மெட்ரோ மேம்பாலத்திலிருந்து மழை நீர்,சாலைகளில் கொட்டுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்‍.

மாநகரில் இடைவெளியின்றி கொட்டித்தீர்க்கும் கனமழையால் ,மெட்ரோ ரயில் உயர்மட்ட மேம்பாலங்களில் தேங்கும் மழைநீரானது, சாலைகளில் கொட்டுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். மெட்ரோ ரயில் தடங்களில் தேங்கும் மழை நீரை, நேரடியாக மழை நீர் வடிகால்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில மெட்ரோ பாலங்களிலிருந்து விழும் நீரை அகற்றுவதற்கான குழாய்கள், சாலை மட்டத்திற்கே அமைக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments