இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: லண்டனில் பள்ளிகளை மூட அரசு உத்தரவு

0 4861
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: லண்டனில் பள்ளிகளை மூட அரசு உத்தரவு

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால் லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
நேற்று ஒரே நாளில் 53 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தலைநகர் லண்டனில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள அரசு, லண்டனில் உள்ள ஆரம்பப்பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அதேபோல் கொரோனா அவசரகால மருத்துவமனைகளை மீண்டும் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments