இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 55,892 பேருக்கு கொரோனா உறுதி

0 1779
இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 55,892 பேருக்கு கொரோனா உறுதி

ங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 55,892 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அந்நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் இதுவே மிக அதிகபட்ச பாதிப்பாகும். மேலும் தொடர்ந்து 3ஆவது நாளாக 50 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதையும் சேர்த்து இங்கிலாந்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 24 லட்சத்து 88 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 964 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 73,512ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மீண்டும் தற்காலிக மருத்துவமனைகளை இங்கிலாந்து தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments