இந்திய கிரிக்கெட் வாரியக் பொதுக்குழு இன்று கூடுகிறது; ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது குறித்து ஆலோசனை

0 2565
இந்திய கிரிக்கெட் வாரியக் பொதுக்குழு இன்று கூடுகிறது; ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது குறித்து ஆலோசனை

ந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது மற்றும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கான 3 புதிய தேர்வாளர்களை தேர்வு செய்வதற்கு கிரிக்கெட் ஆலோசனைக் குழு அமைப்பது, நடுவர்கள் குழு, தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால போட்டித் தொடர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments