படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம் என தகவல்

0 12348
நடிகர் ரஜினிகாந்த்தின் "அண்ணாத்த " படகுழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் "அண்ணாத்த " படகுழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

ஐதராபாத்- ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் கடந்த 14 ஆம் தேதி முதல் "அண்ணாத்த" படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த சூழலில், கொரோனா உறுதி செய்யப்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, " அண்ணாத்த" படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதாகவும், ரஜினிகாந்த் உள்ளிட்ட கலைஞர்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் சென்னை திரும்ப முடிவு செய்துள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments