குற்றாலத்தில் கல்லூரி மாணவிக்கு தொல்லை ; அரசுப்பள்ளி ஆசிரியர் மன்மதராஜ் கைது!

0 13872

குற்றாலத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மன்மதராஜ் ( வயது35). இவர், குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த பள்ளியில் படித்து 19 வயது முன்னாள் மாணவி, தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் மன்மதராஜிடத்தில் அந்த மாணவி சந்தேகங்கள் கேட்பதும் அதற்கு ஆசிரியர் நல்லபடியாக விளக்கம் அளிப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. இதனால், ஆசிரியர் மன்மதராஜ் மீது அந்த மாணவிக்கு தனி மரியாதை இருந்துள்ளது. கல்லூரியில் சேர்ந்த பிறகும் ஆசிரியர் மன்மதராஜிடத்தில் பாடத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதை மாணவி வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில், மன்மதராஜை தொலைபேசியில் தொடர்புகொண்ட மாணவி, தனக்கு பாடத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார். தான் குற்றாலம் பூங்காவில் இருப்பதாகவும், அங்கு வரும்படியும் மாணவியிடத்தில் மன்மதராஜ் கூறியுள்ளார். தொடர்ந்து, மாணவியும் குற்றாலம் பூங்காவுக்கு சென்றுள்ளார்.

பாடத்தில் சந்தேகங்களை விளக்கிக் கொண்டிருந்த ஆசிரியர் மன்மதராஜ், திடீரென மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் , அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். அங்கிருந்த , பொதுமக்கள் ஆசிரியரை பிடித்து குற்றாலம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த குற்றாலம் போலீஸார் மன்மதராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments