தீயணைக்கும் முயற்சியில் பலியான வீரரின் மனைவி எடுத்த பரிதாப முடிவு!- குழந்தைகள் நிலையால் உறவினர்கள் கண்ணீர்

0 8230

மதுரையில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் கடந்த நவம்பர் 14 - ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் மதுரை நகர் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது, தீயில் சிக்கி தீயணைப்பு வீரர் சிவராஜன் என்பவர் பலியானார். சிவராஜனுக்கு அங்கையற்கண்ணி என்ற மனைவியும் 6 மற்றும் 2 வயதில் மகன்களும் உண்டு. பணியின் போது, இறந்த சிவராஜன் மனைவிக்கு திண்டுக்கல் தீயணைப்புத்துறையில் எழுத்தர் பணி வழங்கப்பட்டது. அரசு தரப்பல் நிதியுதவியும் செய்யப்பட்டது. எனினும், கணவர் இறந்த துக்கத்திலேயே இருந்த அங்கையற்கண்ணி பணியில் சேரவில்லை. தன் பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்தார்.

இந்த நிலையில், பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நிலையில், குழந்தைகளை பக்கத்து வீட்டாரிடத்தில் கொடுத்து விட்டு அங்கையற்கண்ணி தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் மகள் இறந்து கிடப்பதைக் கண்டு துடி துடித்து போனார்கள். தாயின் உடலை பார்த்து குழந்தைகளும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. கணவர் இறந்த சோகம் தாங்காமல்தான் அங்கையற்கண்ணி இறந்ததாக சொல்லப்படுகிறது. அங்கையற்கண்ணிக்கு முறையான கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டிருந்தால், கணவர் இறந்த துக்கத்திலிருந்து மீண்டிருப்பார் இத்தகையை விபரீத முடிவு எடுத்திருக்க மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. தந்தை, தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலையை கண்டு உறவினர்கள் மனம் கலங்கி நிற்கிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments